அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்களுடன் மொத்தமாக 19 செயற்கைக்கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி51 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி அறிவியலில் முன்னேற்றம் கண்டுள்ள இஸ்ரோ கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களையும் மொத்தமாக விண்வெளிக்கு அனுப்பவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 செயற்கை கோள்கள், இந்தியாவின் 5 செயற்கைக்கோள்கள் மற்றும் பிரேசிலின் அமேசானியா பிரதான செயற்கைக்கோள் ஆகிய 19 செயற்கைக்கோள்களை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சென்னை, கோவை மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களுடன் பிரதமர் மோடியின் படம் கொண்ட செயற்கைக்கோளும் இவற்றுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.