Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒடிடி தொடர்களுக்கான நெறிமுறைகள் விரைவில் வெளியீடு - மத்திய அமைச்சர் தகவல்

Advertiesment
ஒடிடி தொடர்களுக்கான நெறிமுறைகள் விரைவில் வெளியீடு - மத்திய அமைச்சர் தகவல்
, புதன், 10 பிப்ரவரி 2021 (18:46 IST)
ஒடிடி தளங்களில் ரிலீஸ் செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசுவிரைவில் ரிலீஸ் செய்யவுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் அமேசன் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்கள் உள்ளன. சமீபத்தில் வெளியான தாண்டவ் மற்றும் மிர்சாபூர் ஆகிய தொடர்கள் வெள்யாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்தொடர்களைத் தடை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்தனர். அதேபோல் வெப் தொடர்கள் பாலியல் காட்சிகள், வன்முறைக்ள், கெட்ட சொற்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஒடிடியில் வெளியாகும் படங்களுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய தகவல தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளதாவது:

ஒடிடியில் வெப் தொடர்கள் ரிலீஸ் செய்யவதற்கான நெறிமுறைக்ள் தயாராக உள்ளதாகவும் விரையில் அவற்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் ஏன்? அமைச்சர் விளக்கம்!