Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்கள் முகத்தில் எச்சில் துப்பும் போராட்டம்: வன்முறையை தூண்டும் வாட்டாள் நாகராஜ்!

தமிழர்கள் முகத்தில் எச்சில் துப்பும் போராட்டம்: வன்முறையை தூண்டும் வாட்டாள் நாகராஜ்!

Advertiesment
தமிழர்கள் முகத்தில் எச்சில் துப்பும் போராட்டம்: வன்முறையை தூண்டும் வாட்டாள் நாகராஜ்!
, திங்கள், 12 செப்டம்பர் 2016 (14:50 IST)
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதையடுத்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


 
 
தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழ் திரைப்படங்களுக்கு தடை, தமிழக பேருந்துகள் செல்ல அனுமதியில்லை, தமிழ் சேனல்களுக்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தமிழர் விரோத போக்கை கடைபிடித்து வரும் கன்னடர்கள் தமிழர்களை தாக்குவோம் எனவும் மிரட்டல் விடுத்தனர்.
 
காலம் காலமாக காவேரி தண்ணீர் பிரச்சணையில் வன்முறை வெறியாட்டங்களை தூண்டிவிடும் கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழர்களை பற்றி தரம்தாழ்ந்தி பேசி வருகிறார்.
 
ஏற்கனவே இவர் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தின் போது, தமிழர்களுக்கு எங்கள் சிறுநீரை தருகிறோம், ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று தன்னுடைய சாக்கடையான வார்த்தைகளை கூறி தமிழர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டார்.
 
காவிரி பிரச்சனை உட்பட தமிழகத்துக்கு எதிரான விவகாரங்களில் விஷத்தை கக்கும் வாட்டாள் நாகராஜ், தற்போது தண்ணீர் கேட்கும் தமிழர்களின் முகங்களில் காரி துப்பும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக கன்னடர்களை முழு வீச்சில் தயார் படுத்தி வருகிறார்.
 
வாட்டாள் நாகராஜ் இதுவரை 2,000 மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கர்நாடகா, கன்னட விவகாரங்களுக்காக சுமார் 10,000க்கும் அதிகமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார். இதற்காக இவர் மீது 350 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரில் 144 தடை உத்தரவு