முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அனைத்து வயதினரும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என தீர்ப்பு கூறினார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் உள்ள ஐயப்ப பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையும் மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்தும் ,கூச்சலிட்டும் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். போராட்டங்களும்,கண்டன குரல்களும் வலுத்து வந்தன. இந்நிலையில் இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
பின்பு ஒருவழியாக பெண்கள் தங்கள் பாதுபாப்புக் கருதி கோவிலுக்குள் செல்லவில்லை. இதனையடுத்து பெண்கள் நுழையாததால் பரம பிரம்மச் சாரியான ஐயப்பனின் இந்துப் பாரம்பரியம் காக்கப்பட்டதாக பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ன்ற தீர்ப்பு இன்னும் அமல்படுத்தப்படவில்லையா?என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்விகள்.
இந்நிலையில் சிறப்பு வழிபாட்டிற்காக சபரிமலை கோயில் நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளது.
இதனால் எந்த அசம்பாவிதமும் நேராத வண்ணம் நாளை முதல் 6 ஆம் தேதி வரை பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கேரளாவுக்குட்பட்ட சபரிமலை சன்னிதானம்,பம்பை ,நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில்144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.