Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிப்பு

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (20:38 IST)
உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டு, காங்கிரஸ் புதிய பொதுச்செயலாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியாக பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி  உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக சில ஆண்டுகள் இருந்தவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி.

இந்த நிலையில், ‘’இன்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டு, காங்கிரஸ் புதிய பொதுச்செயலாளராக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments