உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டார்.
அவர் மீண்டும் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் வென்றது என்பதும் முந்தைய தேர்தலை விட மோசமான தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உத்தரபிரதேசம் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராகத் அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.