Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியா?

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (08:15 IST)
காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெயர் இருந்தது. ஆனால் புதியதாக அரசியல் களம் புகுந்துள்ள பிரியங்கா காந்தியின் பெயர் அந்த பட்டியலில் இல்லாததால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே கூறப்பட்டது.
 
ஆனால் பிரியங்கா காந்தியின் பெயர் கடைசி நேரத்தில் அதிரடியாக பட்டியலில் இணைக்கப்படும் என்றும், அவர் உத்தரபிரதேசத்தில் ஒரு முக்கிய வேட்பாளருக்கு எதிராக நிறுத்தப்படுவார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் ஒரு செய்தி கசிந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மட்டுமே செய்வார் என்றும், வரும் உபி மாநில சட்டமன்ற தேர்தலின்போது அவர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் இன்னொரு செய்தி கூறுகின்றது.
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தற்போது உபி மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவருடைய பிரச்சாரம் அம்மாநிலத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியை பின்னுக்கு தள்ளும் என கூறப்படுகிறது
 
மேலும் உபி மட்டுமின்றி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பிரியங்காவின் சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் அவருடைய சுற்றுப்பயண திட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments