நேற்று பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட இருக்கின்ற நிலையில், அந்த கூட்டுக் குழுவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் ஆதரவு இல்லாத நிலையில், கூட்டு குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற நிலையில், மசோதா பாராளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு குழுவில் ஒவ்வொரு கட்சிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இதனடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்த வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்டு, முதல் முறையாக எம்பி ஆகி உள்ள பிரியங்கா காந்தி, முக்கிய மசோதாவை முடிவு செய்யும் கூட்டுக் குழுவில் காங்கிரஸ் சார்பில் இடம் பிடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.