Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கம்???- நிர்மலா சீதாராமன் விளக்கம்

Advertiesment
Public Sector Banks- Nirmala Sitharaman
, செவ்வாய், 16 மார்ச் 2021 (19:16 IST)
அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறைவங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று முதல் வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது.

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்கள் வங்கிகள் விடுப்பு என்பதால் இ இன்று வங்கிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்கள் மற்றும் வணிகர்கள் அவதிக்குள்ளாகினர். ஏடிஎம்களிலும்பணம் நிரப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில்,அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்றும், பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் மற்றும் ஓய்வூதியம் அனைத்தும் பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு ?