180 மாணவிகளின் தலைமுடியை அறுத்த தலைமை ஆசிரியர்!!..அப்படி என்ன காரணம்??

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (16:22 IST)
தெலுங்கானாவில் 180 மாணவிகளின் தலைமுடியை தலைமை ஆசிரியர் வெட்டியுள்ளார். என்ன காரணம் என்று பார்க்கலாம்.

தெலுங்கானா மாநிலம் மெலக் நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவிகள் தங்கும் வசதியும் உண்டு.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. ஆழ்குழாய் கிண்று வறண்டதால் 3 நாட்களுக்கு ஒரு முறை லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மாணவிகளின் தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிகமாக தண்ணீர் செல்வாவதாக கூறி, அங்கு தங்கி பயின்ற 108 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். இதன் பிறகு நேற்று மாணவிகளை பார்க்க வந்த பெற்றோர்கள், மாணவிகளின் தலைமுடியை  பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிறகு அந்த மாணவிகளின் பெற்றோர்கள், தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: சென்னை, புறநகர்வாசிகள் உஷார்!

நீட் பயிற்சியில் இருந்த 20 வயது மாணவர் மர்ம மரணம்.. கொலையா? தற்கொலையா?

பாறையின் கீழ் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை: உயிரைக் காப்பாற்றிய அழுகுரல்: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இஸ்ரேலின் சியோனிஸ்டுகள் இரட்டை குழந்தைகள்: கடுமையாக விமர்சித்த பினராயி விஜயன்!

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட நாணயம்.. பிரதமர் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments