Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

Siva
ஞாயிறு, 30 மார்ச் 2025 (07:17 IST)
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் இன்று செல்கிறார். அங்குள்ள முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். அதன்பின் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குச் செல்லும் பிரதமர், அதன் நிறுவனர் தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
 
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 2014ல் தொடங்கப்பட்ட மாதவ் நேத்ராலயா கண் மருத்துவமனைக்கான விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். புதிய மருத்துவமனையில் 250 படுக்கைகள், 14 வெளிநோயாளி பிரிவுகள், 14 அறுவை சிகிச்சை மையங்கள் போன்ற வசதிகள் உருவாக்கப்படுகின்றன.
 
மேலும், ‘சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் வெடிபொருள் உற்பத்தி நிலையத்திலும், புதிய விமான ஓடுபாதை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். பின், பி.ஆர்.அம்பேத்கர் புத்த மதம் தழுவிய தீக்ஷாபூமிக்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.
 
பின்னர், சத்தீஸ்கரில் நடைபெறும் ₹33,700 கோடி மதிப்பிலான நலத்திட்ட தொடக்க நிகழ்விலும் பங்கேற்கிறார்.  இவ்வாறு பிரதமரின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் வருகையையொட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments