Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தையல் மிஷினில் உட்கார்ந்து மாஸ்குகள் தைக்கும் இந்திய ஜனாதிபதியின் மனைவி: வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (08:04 IST)
மாஸ்குகள் தைக்கும் இந்திய ஜனாதிபதியின் மனைவி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் அனைத்து இந்திய மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவி சவீதா கோவிந்த் அவர்களும் இந்த போரில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஜனாதிபதி மாளிகையில் உள்ள ஒரு பகுதியில் தினமும் காலை முதல் மாலை வரை தையல் மிஷினில் உட்கார்ந்து தனது கையாலே மாஸ்க்குகளை ராம்நாத் கோவிந்த் மனைவி சவீதா கோவிந்த் தைத்து வருகிறார். இந்த மாஸ்குக்கள் டெல்லியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இலவசமாக விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது
 
இந்தியாவின் முதல் குடிமகனாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவியே ராம்நாத் வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு எதிராக களம் இறங்கியிருப்பது அனைவரையும் பெருமைப்பட வைத்து உள்ளது. மேலும் ஜனாதிபதி மனைவி சவீதா கோவிந்த் தையல் மிஷினில் உட்கார்ந்து மாஸ்குகள் தைக்கும் புகைப்படம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments