Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி: ஒருவழியாக அனுமதி அளித்த மத்திய அரசு!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (08:19 IST)
தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்று கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவிவித்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கர்ப்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கினால் கர்ப்பிணிகள் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படுவதால் தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்று கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

2011க்கு பிறகு அதிபயங்கர நிலநடுக்கம்! பல நாடுகளை நோக்கி வரும் சுனாமி அலைகள்! - அதிர்ச்சி வீடியோ!

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!

ஓபிஎஸ் இன்று அவசர ஆலோசனை.. பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments