நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் ஆக்கிரமித்து கொண்டதால் பிரவசத்திற்கு வரும் கர்ப்பிணிகள் உள்பட மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது
அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் பெரும்பாலும் கொரோனா நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருந்தாலும் கொரோனா நோயாளிகளிடம் அதிக பணம் பெறலாம் என்பதால் மற்ற நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்று கூறப்படும் நிலை தான் உள்ளது.
இந்த நிலையில் நொய்டாவில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்த போது எந்த மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இல்லாததால் கிட்டத்தட்ட 13 மணி நேரமாக அலைந்துள்ளார். இதனை அடுத்து அவர் குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கியது போக மற்ற நோயாளிகளுக்கும் படுக்கை வசதிகளை மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படுக்கைகள் இருக்கும்போதே இல்லை என கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது