Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மோடி தான்.. பாஜகவின் பலம் என்ன? பலவீனம் என்ன? பிரசாந்த் கிஷோர்..!

Mahendran
சனி, 9 மார்ச் 2024 (09:14 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றும் என்றும் மோடி தான் மீண்டும் பிரதமர் என்றும் கூறியுள்ள அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அதே நேரத்தில் பாஜகவுக்கு சில பலவீனங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் வெற்றி குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர் ’பொதுவாக மக்களவை தேர்தலில் ஒரு கட்சிக்கும் சட்டசபை தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்களிப்பதை நாம் இதுவரை பார்த்து வருகிறோம். ஆனால் சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த பொதுமக்கள் இந்த முறை மீண்டும் மக்களவைத் தேர்தலில் அதே கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்
 
ஆனால் அதே நேரத்தில் ஒரே நபர் மற்றும் ஒரே கட்சி இடம் அனைத்து அதிகாரமும் இருப்பதை மக்கள் விரும்பவில்லை என்றும் இதை சாதாரண மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் இது பாஜகவுக்கு மிகப்பெரிய பலவீனம் என்றும் தெரிவித்தார்

பாஜக அதிகாரத்தை குவித்து வருவது ஆபத்து என்று பேசும்போது எல்லாம் இந்திரா காந்தி காலத்திலும் இதுதான் நடந்துள்ளது என்று நமக்கு கிடைக்கும் பதிலாக உள்ளது என்றும் இந்திரா காந்தி மாதிரி ஒரு சர்வாதிகாரியாக மோடி மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

ஆனால் அதே நேரத்தில் பாஜகவை காட்டிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்தியாவில் வலிமையான கட்டமைப்பை கொண்டிருப்பதாகவும் அது பாஜகவின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments