Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சீர்திருத்த சட்டம்: சோனியா காந்திக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (06:57 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு சோனியா காந்தி எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் வரும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணிபுரிந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் குடிரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? என்றும் இது குறித்த போராட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் நடைபெற்று வரும் போது அதற்கு ஆதரவு தெரிவித்து அவர் ஒரு வார்த்தை கூட கூறாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார் 
 
புதுவை உள்பட காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்களின் முதல்வர்கள் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ள நிலையில் சோனியா காந்தி இது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் மெளனமாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கேள்விக்கு சோனியா காந்தி என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments