முன்னாள் குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:51 IST)
இந்தியாவில் நாள்தோறும் அரசியல் தலைவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் மருத்துவமனையில் வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments