முதலில் உங்கள் மாநிலத்தை கவனியுங்கள்: உபி முதல்வருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (06:40 IST)
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் பெங்களூரில் நடந்த பாஜகவின் யாத்திரை ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், உபி முதல்வருக்கு தனது டுவிட்டரில் கேள்வி ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், “சுவர்களின் நிறத்தை மாற்றுவதே வளர்ச்சியா?. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காததால் தக்காளியை உங்கள் வீட்டின் முன் கொட்டுகிறார்கள். அதை முதலில் கவனியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

சமீபத்தில் கர்நாடகத்தில் சுட்டு கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து பிரகாஷ்ராஜ் பிரதமரை நோக்கி எழுப்பிய காரசாரமான கேள்வியால் அவருக்கும், பாஜகவினர்களுக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments