டெல்லி கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ்தான் காரணம்! – பிரகாஷ் ஜவடேகர்!

Webdunia
வியாழன், 27 பிப்ரவரி 2020 (16:43 IST)
டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். பல வீடுகளும், கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரத்திற்கு காரணம் மத்திய அரசின் மெத்தனமே என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”ஆரம்பம் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிஏஏ குறித்து மக்களை தவறாக வழிநடத்தியன் விளைவாகவே இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்திற்கு காரணம் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளே. கலவரம் நடந்த பகுதிகளில் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஆயுதங்களுடன் இருந்த வீடியோ வெளியாகியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வன்முறையிலிருந்து டெல்லியை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும், தற்போது டெல்லியில் அமைதி திரும்பியிருக்கும் சூழலில் அது தொடர அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments