Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி …நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - பிரகாஷ் ஜவடேகர்

சிறுகுறு  நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி …நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் - பிரகாஷ் ஜவடேகர்
, திங்கள், 1 ஜூன் 2020 (17:35 IST)
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,394 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 ஆக உயர்ந்துள்ளது. கொரொனாவால் உள்நாட்டு பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனெவே பிரதமர் நரேந்திரமோடி ரூ.20  லட்சம் கோடிக்கான திட்டம் பற்றி அறிவித்தார். அதற்கான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் நாட்டு மக்களுக்கு பல அறிவிப்புகளையும் திட்டங்களையும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

சிறுகுறு தொழில்கள் குறித்து முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும் . ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவியாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.  சிறுகுறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்.

 மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவியாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கொரோனா இறப்பு: சென்னையின் நிலை தான் என்ன??