Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

Siva
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (08:35 IST)
முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பாலியல் வழக்கில் குற்றவாளி என பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு "சாகும் வரை சிறை தண்டனை" விதித்து நீதிபதி சந்தோஷ் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
 
பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பிரஜ்வல் ரேவண்ணா தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.11 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
முன்னதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியதையடுத்து, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் பிரதமரின் பேரன் ஒருவர் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருப்பது, கர்நாடகா மற்றும் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்