இந்திய அஞ்சல் துறை ட்ரோன் மூலம் மருத்துவ பார்சலை அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்திய அஞ்சல்துறை நாளுக்கு நாள் நலிந்து கொண்டே சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்திய அஞ்சல் துறை தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
அந்த வகையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்ல வேண்டிய ஒரு மருத்துவ பார்சலை ட்ரோன் மூலம் அனுப்பி உள்ளது
இந்த பார்சல் 25 நிமிடத்தில் சேரவேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்து விட்டதாகவும் இந்த சோதனை முயற்சியை சக்சஸ் என்றும் இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது
இதனை அடுத்து நாடு முழுவதும் பார்சலை ட்ரோன் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அஞ்சல் துறை தெரிவித்துள்ளது