Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து மதத்திற்கு மாறிய பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்?

இந்து மதத்திற்கு மாறிய பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்?

கே.என்.வடிவேல்
வியாழன், 7 ஜூலை 2016 (05:24 IST)
பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இந்து மதத்திற்கு மாறியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமானவர் பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். இவர்ஒரு கிறிஸ்தவர் ஆவார். ஆனால், இவர் அருள்மிகு மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கத்தை கொண்டவர். மேலும், சுவாமி ஐய்யப்பன் பக்தி பாடல்கள் உள்ளிட்ட பல பக்தி பாடல்களைபாடி இந்துக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவர்.
 
இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இந்து மதத்திற்கு மாறியதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில், இந்த சம்பவம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதை வரவேற்கலாம் என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து, மேலும் பரபரப்பை எகிறவைத்தார்.
 
ஆனால், இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என கே.ஜே.ஜேசுதாஸ் தரப்பில் இருந்து மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.ஜே.ஜேசுதாஸ் குறித்த இந்த தகவலால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments