தாங்கள் கேட்ட லஞ்ச பணத்தை தர மறுத்த 2 கூலித் தொழிலாளிகளை, போலீசார் அடித்தே கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலமான மணிப்பூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று மணிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 4 கூலித் தொழிலாளிகளிடம் கூலி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
ஆனால், அவர்கள் அந்த பணத்தை தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காவலர்கள் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக அடித்துள்ளனர். இதில் இரண்டு பேர் அங்கேயே இறந்துவிட்டனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிய வரவும்,பொதுமக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதுபற்றி விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்த பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தேவ்ரஞ்சன் வர்மா கூறியுள்ளார்.