மீடூ விவகாரம்: 3 மணி நேரம் அர்ஜூனிடம் விசாரணை...!

திங்கள், 5 நவம்பர் 2018 (20:09 IST)
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ஆக்சன் கிங் அர்ஜூன் மீது தெரிவித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. அர்ஜுனை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தபோதிலும், ஸ்ருதி புகார் குறித்த விசாரணையை போலீசார் தொடரலாம் என நீதிமன்றம் அனுமதித்தது

இதனையடுத்து இன்று விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் இன்று போலீசார் முன் ஆஜரான அர்ஜூனை காவல்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை செய்தனர். அர்ஜுனிடம் நடத்திய விசாரணை குறித்த விபரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இருப்பினும் அர்ஜூனை மீண்டும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ,மே தின விடுமுறையை ரத்து செய்த பாஜக அரசு: உழைப்பாளர் கொதிப்பு