Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றவர் கைது!

Advertiesment
கபாலி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்றவர் கைது!
, சனி, 23 ஜூலை 2016 (08:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் கபாலி திரைப்படம் வெளியானது. அதேப்போல் ஆந்திராவிலும் பல்வேறு தியேட்டர்களில் தெலுங்கில் கபாலி திரைப்படம் வெளியானது.


 
 
கபாலி திரைப்படம் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்தவாறு உள்ளன. சென்னையுலும் தியேட்டர்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 
அதேப்போல் ஐதராபாத்திலும் கபாலி டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, ஐதராபாத்தில் ‘கபாலி’ திரைப்படம் திரையிடப்பட்ட 11 திரையரங்குகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையில், திரையரங்குகளில் கபாலி பட டிக்கெட்டை அதிகவிலைக்கு விற்ற 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 126 டிக்கெட்டுகளும், ரூ.11640 பணத்தையும் காவல்துறை கைப்பற்றியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா நூலகப் பணிகளை முடிக்க நீதிமன்றம் இறுதிக்கெடு