செல்போன் திருட 45 நாள் பயிற்சி.. பயிற்சிக்கு பின் வேலை.. கும்பலை வளைத்த போலீஸ்..!

Mahendran
புதன், 14 பிப்ரவரி 2024 (12:09 IST)
செல்போன் திருட 45 நாட்கள் பயிற்சி கொடுத்து அதன் பின் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலையும் வழங்கிய கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் அகமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத் நகரில் அவ்வப்போது செல்போன்கள் திருட்டு போனது குறித்து புகார்கள் காவல்துறைக்கு வந்தன. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் செல்போன் திருடுவதற்கு என்று ஒரு கும்பல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
]  
அதன்பின் தீவிர விசாரணை செய்தபோதுதான் செல்போன் திருடுவதற்கு என்றே ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த பயிற்சி பள்ளியில் செல்போன் திருடுவது எப்படி என பயிற்சி கொடுத்தது மட்டுமின்றி பயிற்சி முடிந்தவுடன் அவர்களையே 25000 மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்த்து கொண்டு செல்போன் திருடி வருவதாகவும் தெரிகிறது.

 இதன் காரணமாகத்தான் அகமதாபாத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான அளவில் செல்போன் திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கும்பலை சுற்றி வளைத்த காவல்துறையினர் ஒட்டுமொத்தமாக கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments