Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியிடம் அத்துமீறல்? முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு! – கர்நாடகாவில் பரபரப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 15 மார்ச் 2024 (09:50 IST)
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சிறுமியை வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா. இவரது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றுள்ளார். அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ALSO READ: லாட்டரி மார்ட்டினிடமிருந்து கோடி கோடியாக நன்கொடை வாங்கிய அரசியல் கட்சி! – தேர்தல் பத்திரத்தில் அம்பேல்!

இதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தால் தேவையான உதவிகளை செய்வதாகவும், வெளியே சொன்னால் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என எடியூரப்பா மிரட்டியதாக அந்த 17 வயது சிறுமியும், அவரது தாயாரும் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

200 இடங்களில் வெற்றி என்பது திமுகவின் பகல் கனவு: எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் தனது ஆட்சியை கூட நம்பவில்லை, கூட்டணியை தான் நம்பி இருக்கிறார்: கேபி முனுசாமி

தென் கொரியா: அதிபருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம் - இனி என்ன நடக்கும்?

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

அடுத்த கட்டுரையில்