பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பிரதமர் மோடி வாழ்த்து கடிதம்..!

Mahendran
செவ்வாய், 18 மார்ச் 2025 (15:39 IST)
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பும் இந்திய வம்சாவளி  விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
 
"இந்திய மக்களின் சார்பாக, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று, புகழ்பெற்ற விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது, உங்களைப் பற்றியும், உங்கள் சாதனைகளைப் பற்றியும் பேசினோம். எங்கள் உரையாடலின் தொடர்ச்சியாக, உங்களுக்கே நேரடியாக கடிதம் எழுதுகிறேன்.
 
நான் அமெரிக்காவுக்கு வந்தபோது, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன். 140 கோடி இந்தியர்களும் உங்கள் சாதனைகளால் பெருமைப்படுகின்றனர்.
 
நீங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு நெருக்கமாகவே இருக்கிறீர்கள். உங்கள் பாதுகாப்பிற்கும் வெற்றிக்காகவும், இந்திய மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
பூமிக்கு திரும்பியவுடன், இந்தியாவில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறோம். இந்தியா, தனது புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்கத் தயாராக உள்ளது.
 
நீங்களும், வில்மோரும் பாதுகாப்பாக பத்திரமாக திரும்புங்கள் என மனமார்ந்த வாழ்த்துக்கள்!"
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments