Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியின் குடும்பம்னு போடாதீங்க.. ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்!

Modi Won

Prasanth Karthick

, செவ்வாய், 11 ஜூன் 2024 (20:01 IST)
பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’, ‘மோடி கா பரிவார்’ என குறிப்பிட்டு வந்த நிலையில் அதை நீக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அப்போது பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதள கணக்குகளில் தங்கள் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்ற அடைமொழியை சேர்த்து வைரலாக்கினர். தற்போது பாஜக கூட்டணி வென்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு வகையான சாதனையாகும், மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் உங்கள் சமூக ஊடக சொத்துக்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு பரிவார் என்ற நமது பந்தம் வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலைக்கு எதிரான குரல்கள் - என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்?