Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏவுக்கு எதிராக போராடிய பிரதமர் மோடியின் மனைவி ?

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:42 IST)
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி கலந்து கொண்டதாக தகவல் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் மத்திய அரசால் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சிஏஏவுக்கு எதிராக பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் போராட்டத்தில் ஈடுபடுதாக சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்தப் புகைப்படத்தில் பெண்கள் சிலர் போராடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
 
மேலும், இந்தப் புகைப்படங்களை ஆய்வு செய்த போது, இது கடந்த 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. பிரதமர் மனவி யசோதாபென் கலந்து கொண்டது, ஆதவரவற்றோருக்கான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் என அதில் தலைப்பிடப்பட்டுள்ளது.
 
அதனால், பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் சிசிஏவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை  எனவும் தவறான தகவல்களை அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments