Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் திடீர் ரத்து!

Advertiesment
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் திடீர் ரத்து!
, புதன், 5 ஜனவரி 2022 (14:52 IST)
பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
இன்று பிரதமர் மோடி பஞ்சாப் மாநில ஃபெரோஸ்பூரில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்துள்ளார்.  ஃபெரோஸ்பூரில் ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட இருந்தார். 
 
மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்ற போது ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் சிக்கியுள்ளது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசனவாய் காற்றை பாட்டிலில் அடைத்து விற்று சம்பாதித்த பெண்! நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதி!