திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்: அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து..!

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2023 (09:54 IST)
நாளை திருப்பதி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய இருக்கும் நிலையில் நாளைய தினத்தின் விஐபி டிக்கெட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  அவருடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து திருப்பதி முழுவதும் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பிரதமர் மோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை காலை தரிசனம் செய்ய இருப்பதால் அனைத்து விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிற வகை தரிசனமும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

ஐந்து மாநில தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த தேர்தலில் வெற்றி பெறவும், விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவும் அவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டிக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments