Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (10:09 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்து வருகின்றன. தினசரி பாதிப்புகள் 2 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் பகுதி நேர மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி மாலை 6 மணியளவில் முன்னணி மருந்து நிறுவனங்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடு முழுவதும் மருத்துவம், மருந்துகள் மற்றும் தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மருந்து உற்பத்தியை அதிகரித்தல் குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments