Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை.. தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி..!

Mahendran
செவ்வாய், 4 ஜூன் 2024 (19:53 IST)
நாடாளுமன்ற தேர்தல் முடிவு இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிக்குமே தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் உள்ள கூட்டணி தொடர்ந்தால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கூட்டணிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் கூட்டணியில் இருந்து விலகி இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தேர்தல் முடிவு குறித்து சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்! இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை.

இந்த பாசத்திற்காக  மக்களுக்கு நான் தலைவணங்குவதுடன், கடந்த பத்தாண்டுகளில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளை தொடர்வோம் என்று உறுதியளிக்கிறேன்.

எங்களது அனைத்து நிர்வாகிகளின் கடின உழைப்பிற்காக நான் வணங்குகிறேன். அவர்களின் பணிகளை வார்த்தைகளால் நிரப்ப முடியாது’ என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments