Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''ஒரு சொட்டு குடிநீரைக் கூட வீணாக்க வேண்டாம்'' - மோடி

Advertiesment
''ஒரு சொட்டு குடிநீரைக் கூட வீணாக்க வேண்டாம்'' - மோடி
, ஞாயிறு, 22 மே 2016 (21:02 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோதி குடிமக்களிடம், ஒரு சொட்டு குடிநீரைக் கூட வீணாக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
அதிகரித்துள்ள வெப்ப அலைகள் மற்றும் கடும் வறட்சியை சமாளிக்க இந்தியா போராடி வரும் வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வருகின்றன.
 
தேசிய வானொலியில் குடிமக்களிடம் உரையாற்றிய மோடி, ''கடவுள் தந்த விலைமதிப்பு மிக்க பரிசு தான் நீர்'' என்று கூறியுள்ளார்.
 
இந்த வெப்ப அலைகள் காரணமாக டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன், ராஜஸ்தானில் அதிகபட்ச வெப்ப நிலையாக 51 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்தியா அறிவித்தது.
 
இந்தியாவில் மோசமாகி வரும் நீர் வளத்தை மோசமாக நிர்வகித்து வருவதாக ஆட்சியாளர்கள் மீது சில விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழப்பு