வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்.. தேர்தல் எப்போது?

Siva
செவ்வாய், 14 மே 2024 (07:35 IST)
பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நான்காவது கட்ட தேர்தல் நடைபெற்றது என்பது ஆந்திரா உள்பட ஒரு சில பகுதிகளில் சில வன்முறை நிகழ்வுகளும் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்னும் மூன்று கட்ட தேர்தலே மீதம் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இன்று வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

வாரணாசி தொகுதியில்  இன்று பிரதமர் மோடி செல்லும் ரோட்ஷோ நடத்த இருப்பதாகவும் முடிந்தவுடன் அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே இரண்டு முறை வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்ட நிலையில் இது அவர் போட்டியிடுவது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

16% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: ரிசர்வ் வங்கி தகவல்

மகளிர் உரிமை தொகை இன்னும் உயரும்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments