Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன – இந்திய மோதல்: குடியரசு தலைவரோடு பிரதமர் மோடி சந்திப்பு!

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (13:11 IST)
நேற்று முன் தினம் லடாக் எல்லைப்பகுதியில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களை சந்துத்து உரையாற்றிய பிரதமர் மோடி இன்று குடியரசு தலைவரை சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த மாதத்தில் சீன – இந்திய படைகளிடையே லடாக் எல்லையில் நிகழ்ந்த மோதலால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததுடன், உள்நாட்டு கட்டமைப்பு பணிகளிலும் சீனாவின் பங்களிப்பை ரத்து செய்தது. அதேசமயம் சீன நாளேடுகல் இந்திய ராணுவம் சீன எல்லையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதாக போலியான செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மீண்டும் எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ள இந்தியா, ராணுவத்திற்காக புதிய விமானங்கள், தளவாடங்களையும் வாங்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் பிரதமர் மோடி திடீர் பயணமாக லடாக் சென்றார். அங்கு ராணுவ வீரர்களை சந்தித்து ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.

இந்நிலையில் இன்று காலை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசியுள்ளார் பிரதமர் மோடி. முப்படைகளின் கட்டுப்பாடு குடியரசு தலைவருக்கு உட்பட்டது என்பதால் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவரிடம் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடி குடியரசு தலைவருக்கு விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments