குடியரசு தினத்துக்கு வந்துட்டு போங்களேன்; அழைத்த மோடி! – ஏற்றுக்கொண்ட போரிஸ் ஜான்சன்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:54 IST)
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு உலக தலைவர்கள் யாரும் இந்தியா வராத நிலையில் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு தலைவர்கள் வந்து விருந்தினராக கலந்து கொண்டு வந்தனர். கடந்த மார்ச்சில் அதிபர் ட்ரம்ப் வந்து சென்ற பிறகு கொரோனா தாக்கம் காரணமாக உலக தலைவர்கள் யாரும் இந்தியா வரவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் விருந்தினராக கலந்து கொள்ள போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளதாக இங்கிலாந்து தூதரக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments