டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி: பாரதியாரை நினைவு கூர்ந்து உரை!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (08:21 IST)
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி: பாரதியாரை நினைவு கூர்ந்து உரை!
இந்தியாவில் இன்று 76 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின சிறப்புரை ஆற்றி வருகிறார்
 
முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார். நாட்டிலுள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அடிமைத்தனத்திற்கு நாம் முடிவுரை எழுத வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
 
நாட்டின் 76வது சுதந்திர தினத்தை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கும் இந்நாளில்,  வேலுநாச்சியார் மகாகவி பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்டத் தலைவர்களை நினைவு கூறுகிறேன் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments