Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பட்ஜெட் மனதுக்கு நிறைவாக உள்ளது! – பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (15:42 IST)
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதுகுறித்து பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள், புதிய திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் மானியங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆண்டு பட்ஜெட் குறித்து பேசியுள்ள பிரதமர் மோடி, மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளதாகவும், மனநிறைவை அளிப்பதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாய பொருட்களுக்கான ஆதார விலைக்கு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

அடுத்த கட்டுரையில்
Show comments