Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய்க்கு சாப்பிடுகிறார்?: சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (18:47 IST)
பிரதமர் மோடி தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த காளான் சாப்பிடுவதாகவும், இதனால் மாதம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாகிறது என குஜராத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அல்பேஸ் தாக்கூர் கூறியுள்ளார்.
 
குஜராத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய கூட்டணி கட்சியை சேர்ந்த அல்பேஸ் தாக்கூர், பிரதமர் மோடி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான் சாப்பிடுகிறார் எனவும் ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபாய் எனவும் சிலர் என்னிடம் கூறினர்.
 
ஒரு காளான் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இதில் தினமும் 5 காளான் சாப்பிடுகிறார் பிரதமர் மோடி. குஜராத் முதல்வராக மோடி இருந்த போதிலிருந்தே இந்த களானை சாப்பிட்டு வருகிறார். அதனால் தான் கறுப்பு நிறமுடைய அவர் அழகாக மாறினார் என்றார்.
 
கடந்த 35 வருடத்திற்கு முன்னர் உள்ள மோடியின் புகைப்படத்தை பார்த்துள்ளேன். அப்போது கருப்பாக இருந்த மோடி தற்போது அழகாக மாறியுள்ளார். தினமும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காளான் சாப்பிடும் பிரதமரால் மாதம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. அவரால் சாதாரண உணவை சாப்பிட முடியாது. இது கேலிக்கூத்தானது. இதற்கு அவர் பதிலளிக்க வேண்டும் என அல்பேஸ் தாக்கூர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments