சிவாஜி சிலை விழுந்து நொறுங்கிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (19:06 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்து நொறுங்கியதை அடுத்து பிரதமர் மோடி, சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார்.

இன்று நடந்த மகாராஷ்டிராவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயரோ, அரசரோ அல்ல. அவர் நமக்கு தெய்வம், நான் அவரது காலடியில் தலைவணங்கி என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எங்களை பொறுத்தவரை எங்கள் தெய்வத்தை விட பெரியது வேறு எதுவும் இல்லை. சிலர் வீர சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அவரை அவமதிப்பிற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை.

சிவாஜி சிலை இடிந்து விழுந்தது என்றதும் நான் சிவாஜியின் மகாராஜாவிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன். இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு பிரதமர் மோடி பேசி உள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments