நடப்பு கல்வி ஆண்டுக்கான JEE மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என 11 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீது கடந்த சில நாட்களாக விசாரணை செய்யப்பட்ட நிலையில் விசாரணை முடிந்து இன்று நீதிபதிகள் 11 மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.
மேலும் வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது என்றும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்துதான் ஆக வேண்டும் என்றும், ஓராண்டு இழப்பதற்கு மாணவர்கள் தயாராக உள்ளனரா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும் எனக் கூறிய நீதிபதிகள், மத்திய அரசு தேர்வுகளை பாதுகாப்பாகவும், தற்காப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவோம் என்று உறுதி அளிருப்பதால் தேர்வுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.