சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை குறைக்க ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ரஷ்ய நாடும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக 50 டாலருக்கும் குறைவாகவே இருந்து வந்த கச்சா எண்ணெய் பேரல் விலை தற்போது 55 டாலரை கடந்துள்ளது. அதன்படி கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகள் விலையை அதற்கேற்ப நிர்ணயித்து வருகின்றனர்.
இந்தியாவில் ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மாதம் இருமுறை மாற்றி வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலை ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.