Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..ஏன்னா நான் ஒரு அமைச்சர் - பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (11:38 IST)
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் வேளையில், பாஜக அமைச்சர் ஒருவர் கூறியிருக்கும் கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையேறி கொண்டே போவதால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதாவது ஏடாகுடமான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்குவதை பாஜக அமைச்சர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
 
அந்த வரிசையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே, நான் ஒரு அமைச்சர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எனக்கு பாதிக்கப்பில்லை என கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் பேசிய அவர் மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது எனக் கூறினார். 
 
மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் வேளையில் மத்திய அமைச்சர் இப்படி பேசியிருப்பது மக்களை கொந்தளிப்படைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments