Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலை 12ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் இயங்காது - பொதுமக்கள் அதிர்ச்சி

Advertiesment
Petrol bunk
, திங்கள், 3 ஜூலை 2017 (15:24 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.


 

 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் கொண்டு வந்ததற்கு அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஏனெனில், அதில் வெளிப்படத்தன்மை இல்லை என சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வந்தனர்
 
இந்நிலையில், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தானியங்கி தொழில்நுட்ப வசதி செய்து தரப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்திருந்தன. ஆனால், அதை இதுவரை நிறைவேற்றவில்லை. கடந்த மாதம் 29ம் தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் தெளிவான உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால், ஜூன் 30ந் தேதி மாலை வரை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
 
எனவே, வருகிற ஜூலை 12ம் தேதி முதல் அனைத்து பெட்ரோல் பங்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என பெட்ரோல் டீலர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவிற்கு போர் எச்சரிக்கை விடும் சீனா!!