Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும் பெட்ரோல் விலை உயர்வில்லை: தேர்தல் முடிந்தவுடன் என்ன ஆகும்?

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (08:52 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு சில மாநிலங்களில் பெட்ரோலின் விலை ரூபாய் 100ஐ தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு இல்லை. அதற்கு நேர்மாறாக ஒரு சில நாட்கள் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பது ஆச்சரியமான ஒன்றாகும் 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உடனடியாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும். ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது
 
எனவே தேர்தல் முடிந்தவுடன் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் பல மடங்கு பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments