Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (09:35 IST)
பெட்ரோல் டீசல் விலையை பொறுத்த வரையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது.  இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். 
 
இந்நிலையில் வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. இதனால் பெட்ரோல் விலையும் பழையபடியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது
 
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.07க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.65.70க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் எந்த மாற்றமும் இன்றி இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.07க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.65.70க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ச்சியாக 3 நாளாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments