Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் போல் தினசரி விலைமாற்றம் ஆகும் பெட்ரோல்-டீசல்?

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (05:27 IST)
சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி விலை தினமும் மாறி வருவது போல கச்சா எண்ணெயின் தினசரி சர்வதேச நிலவரத்திற்கு தகுந்தபடி இனிமேல் பெட்ரோல்-டீசல் விலையும் தினசரி விலை நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது பெட்ரோல்-டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 


தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறை அமலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை தினமும் சில பைசாக்கள் குறையும் அல்லது ஏறும். பெரிய மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைய மாட்டார்கள், என்றும் அதே சமயத்தில் இந்த நடைமுறையை எளிதாக அமல்படுத்த தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவும் என்றும், விலை மாறுதல்களை தினமும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கலாம் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments